ராஜீவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய கவர்னர்

65பார்த்தது
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் தேசிய வன்முறை எதிர்ப்பு நாளாக புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். \n தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜவேலு, சாய் ஜெ சரவணன் குமார், சிவகொழுந்து, ஏ. கே. டி ஆறுமுகம், அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, ரவிக்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அனைவரும் வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி