வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிகளில் இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.