புதுச்சேரியில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை

1பார்த்தது
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

தொடர்புடைய செய்தி