புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராஜேந்திரனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இயக்குனர் அமீர் மற்றும் போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஜாஃபர் சாதிக் ஆகியோரின் நெருங்கிய நண்பரான ராஜேந்திரன், சினிமா மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். இந்த சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.