புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முழுமையாக கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.