பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும், அரசு செயலர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் திரு வி பி ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் திரு பி எம் எல் கல்யாணசுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.