அமித்ஷா உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா

229பார்த்தது
புதுச்சேரி வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், எந்த விசாரணைக்கும் தான் தயார் என்றும், அமித்ஷா நிரூபிக்கத் தவறினால் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் தான் தயார் என நாராயணசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி