புதுச்சேரியில் ஜல் ஜீவன் மிஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0பார்த்தது
புதுச்சேரி அரசுக்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் இடையே ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்திற்காக காணொளி காட்சி வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி. ஆர். பாட்டீல், இணையமைச்சர் சோமன்னா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் குடிநீர் விநியோகத் துறைச் செயலாளர் அசோக் கே. கே. மீனா மற்றும் புதுச்சேரி அரசுச் செயலர் முத்தம்மா, உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சவுகான் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.