புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரியும் இருசப்பன், தனது பணி நேரத்தில் கண்டெடுத்த சுமார் 4.5 பவுன் தங்க நகைகள், பணம் அடங்கிய கைப்பையை உடனடியாக ஜிப்மர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். விசாரணைக்குப் பிறகு, அந்தப் பை புதுச்சேரி வீட்டு வசதி கூட்டமைப்பின் துணைப் பொறியாளர் தமிழ் அரிமாவுக்குச் சொந்தமானது கண்டறியப்பட்டது. ஜிப்மர் பாதுகாப்பு அதிகாரிகள் பையை தமிழ் அரிமாவிடம் ஒப்படைத்தனர். ஊழியர் இருசப்பனின் நேர்மையைப் பாராட்டி ஜிப்மர் இணை இயக்குநர் ரங்கபாஷ்யம் கௌரவித்தார்.