காரைக்கால்: 25 மீனவர்கள் கைது விஜய் பரபரப்பு அறிக்கை

0பார்த்தது
காரைக்கால்: 25 மீனவர்கள் கைது விஜய் பரபரப்பு அறிக்கை
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து, படகுகளை மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி