இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்களை எதிர்வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.