கரிக்கலாம்பாக்கம்: கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
கரிக்கலாம்பாக்கம்: கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் புருஷோத்தம்மன் (31), குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர். கடந்த மாதம் சாலை விபத்தில் இடது கை தோள்பட்டையில் அடிபட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், வீட்டு வரண்டாவில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி