புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிட வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி, என். ஆர்.
காங்கிரஸ் எம். எல். ஏக்கள், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கலைஞரின் நினைவாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.