உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கதிர்காமத்தில் உள்ள கனகன் ஏரி, நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஏரிக்கரைகளில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்தப் பணி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.