காட்டேரிக்குப்பம்: கஞ்சா கடத்தல் 2 பேர் அதிரடி கைது

0பார்த்தது
காட்டேரிக்குப்பம்: கஞ்சா கடத்தல் 2 பேர் அதிரடி கைது
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் கஞ்சா கடத்தியதாக போஸ் (21) மற்றும் பிலோமின்தாஸ் (25) ஆகிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 95 கிராம் கஞ்சா, பைக் மற்றும் இரண்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கூலி வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.