கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு தெற்கு தெருவைச் சேர்ந்த 65 வயதான ஜெயலட்சுமி, ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மனமுடைந்து வீட்டின் அருகே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தார். இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.