புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் 103வது நினைவஞ்சலி விழா இன்று கருவடிக்குப்பம் மயானத்தில் நடைபெற்றது. கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் தலைவர் ஆர். கே செல்வமணி மற்றும் திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.