புதுச்சேரியில் 76வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று மாலை தொடங்கின. புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழக அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். புதுச்சேரி கூடைப்பந்து சங்கம், இந்திய கூடைப்பந்து சம்மேளனம், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுச்சேரி ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளை நடத்துகின்றன.