புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் நேரு(எ)குப்புசாமி தலைமையில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து மின்துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. அப்போது, மின் கட்டணம் உயர்வு மற்றும் ப்ரீபெய்ட் மீட்டர் திட்டம் போன்ற திட்டங்களை கைவிடுமாறு கோஷமிடப்பட்டது. பின்னர், மின் கட்டண உயர்வு மற்றும் பிரிப்பெய்டு மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி மின்துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.