புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் ரோஜா வீதியைச் சேர்ந்த ராமசாமி (55) என்பவர், பெருமாள் கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மரக்காணம் சென்று திரும்பியபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மர்மநபர் திருடிச் சென்றதாகக் கூறி ராமசாமி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டுப்போன மோட்டார் சைக்கிளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.