முத்தியால்பேட்டை செந்தாமரை நகரைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தி, கணவர் மாரிமுத்து அழைத்தும் பெரியம்மா ஈமச்சடங்கிற்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 0413-2336066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.