புதுச்சேரி: முதலமைச்சர் ஆளுநரை அவமதிப்பதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

61பார்த்தது
புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை கோவில் தேர் திருவிழாவில் முதலமைச்சர் தாமதமாக வந்ததாகவும், துணைநிலை ஆளுநர் வந்த பிறகும் அவர் காத்திருக்க வைக்கப்பட்டார் என்றும் கூறினார். 

முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநரை வெளிப்படையாக அவமதித்திருக்கிறார் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். ரங்கசாமி முதலமைச்சரான பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி நிதியை செலுத்தவில்லை என்றும், இந்த ஆட்சியில் போராட்டம் நடத்தினால் தான் எதுவும் நடக்கும் என்ற நிலை உள்ளது. இந்த அரசு போராட்டங்களை சந்திக்கும் அரசாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்யவும், தேவையான திட்டங்களை கொண்டுவரும் அரசாக இல்லை என கூறினார். 

மேலும் முதலமைச்சருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் மோதல் உள்ளதாக தெரிகிறது. இருவரின் கருத்து வேறுபாடு மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுகவை கூட்டணியில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பாஜக பலவீனப்படுத்துகிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி