இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய இராணுவம் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. பாலயோகி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி பல்வேறு சாலைகள் வழியாக மூவர்ண கொடியை ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.