புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், இலவச வைஃபை, டிஜிட்டல் கட்டண சேவைகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய தலைமுறை "என்-ஜென் (N-Gen)" அஞ்சலகம் இன்று தொடங்கப்பட்டது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்ட இந்த அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் விரைவாக சேவை பெறும் வகையில் கவுன்டர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்பீடு போஸ்ட், பார்சல், சேமிப்பு வங்கி உள்ளிட்ட சேவைகள் விரைவாக வழங்கப்படும். விழாவை ஜிப்மர் துணை இயக்குநர் திறந்து வைத்தார்.