கலெக்டர் உத்தரவின் பெயரில் குண்டாஸில் பிரபல ரவுடி கைது

0பார்த்தது
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா, வெடிகுண்டு, அடிதடி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சுருதி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் கௌதமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, கௌதமை குண்டாஸில் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி