புதுச்சேரி: பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய எதிர்கட்சி தலைவர்

54பார்த்தது
புதுச்சேரி: பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய எதிர்கட்சி தலைவர்
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வில்லியனூர் தொகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொகுதியை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சத்திற்கான திருமண உதவித் தொகைக்கான ஆணைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தி. மு. க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாஸ், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி தலைவர் பழனிசாமி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், ஜெகன்மோகன், , தொகுதி செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மற்றும் ராஜி, மிலிட்டரி முருகன், தங்கராசு, வெங்கடேசன், பாலகிருஷ்ணன், சுரேஷ், முருகன், வீரக்கண்ணு, அஞ்சாபுலி, அன்பு, சிவக்குமார், தயாளன், வீரமுத்து, சிலம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி