தங்க கம்மலை மீட்டெடுத்த பெண்ணுக்கு உரிமையாளர் பாராட்டு

0பார்த்தது
புதுவை குருமாம்பேட் அமைதி நகர் பகுதியில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் ஜோதி, கீழே கிடந்த ஒரு பவுன் தங்க கம்மலை கண்டெடுத்து, அதை உரியவரிடம் சேர்க்க மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகையை தவறவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி செல்லம்மாள் (74) என்பவரிடம் வடக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரகு நாயகம், ஜோதி முன்னிலையில் நகையை ஒப்படைத்தார். மேலும், துப்புரவு பணியாளர் ஜோதியின் நேர்மையை பாராட்டி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி