வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (டிச.3) புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.