மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) காலை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.99 உயர்ந்து ரூ. 99.28 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 2.92 உயர்ந்து ரூ. 89.39 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.