புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்த போலீஸ்

2பார்த்தது
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்த போலீஸ்
புதுச்சேரியில் வரும் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தவெக தலைவர் விஜய் அவர்களின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, ஐஜி, டிஐஜி மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனும் பங்கேற்றார். கூட்டம் முடிந்த பின்னர், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்றும், அதற்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் டி. ஐ. ஜி சத்தியசுந்தரம் பேட்டியளித்தார்.