முதலமைச்சர் ரங்கசாமி சிங்கார் வேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது, பொதுப்பணித்துறை ஊழியர்கள் அவரை முற்றுகையிட முயன்றனர். இதனால் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் ஒரு ஊழியருக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் போலீசாரை தாக்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.