புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ.93 கோடியில் விரிவாக்க நடவடிக்கை

777பார்த்தது
புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ.93 கோடியில் விரிவாக்க நடவடிக்கை
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளுடன் கூடுதலாக ஒரு 5-வது நடைமேடை அமைக்கப்படவுள்ளது. இது 540 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இதனால் ஒரே நேரத்தில் 5 ரயில்கள் நிற்க முடியும். இந்தப் புதிய நடைமேடைக்கு டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி  வினோத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரி ரயில் நிலையம் ரூ.93 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.