வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

136பார்த்தது
வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இன்று (மே 25) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த மின்தடையால் புஸ்சி வீதிக்கு வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு, சத்தியா நகர் மற்றும் சக்தி நகருக்கு கிழக்கு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். மேலும், முத்தியால்பேட்டை, கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், குருசு குப்பம், வைத்திகுப்பம், குபேர் சாலை வரை, டவுன் புல்வார்டு, கோவிந்த சாலை, பிருந்தாவனம், சாந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாரம், ராஜய்யர் தோட்டம், லெனின் வீதி, சத்தியா நகர், சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை நீடிக்கும்.

தொடர்புடைய செய்தி