வில்லியனூர்: தனியார் பள்ளி மாணவன் மாயம்

546பார்த்தது
வில்லியனூர்: தனியார் பள்ளி மாணவன் மாயம்
வில்லியனூர், கூடப்பாக்கம் ரோடு மகாலட்சுமி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன் என்பவரின் மகன் பரணிதரன் (பிளஸ் 2 மாணவர்), சனிக்கிழமை நீட் மாடல் தேர்வுக்காக சைக்கிளில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் புஷ்பா அளித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி