புதுவையில் மரங்களை வெட்டிய அமைச்சரை கண்டித்து போராட்டம்

78பார்த்தது
புதுச்சேரி வனத்துறை அமைச்சராக உள்ள தேனீ. ஜெயக்குமார் தொடர்ந்து இயற்கைக்கு எதிராகவும் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறியும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து புதுச்சேரியில் இருக்கும் பல்வேறு 500, 400, 300 ஆண்டுகளை கடந்த மரங்களை வனத்துறை அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக தன் சுயநலத்திற்காக பல மரங்களை வெட்டி வருவதை கண்டித்து வில்லியனூர் மாடவீதியில் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது அவர்கள் பழமைவாய்ந்த மரங்களை வெட்டி சாய்க்கும் வனத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், இவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற பாதுகாப்பு இயக்க தலைவர் ஆறுமுகம், இளவரசன், சமூக மூத்த வன்னியர் சங்க தலைவர் அழகானந்தம், சமூக ஆர்வலர்கள் முரளிதரன், பி. ஆர். டி. பிரபு, கல்தாகுப்பம் சரவணன் மற்றும் செம்படுகை நன்னீர் இயக்கம் இராமமூர்த்தி உள்பட பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி