சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.