சேதராப்பட்டில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் சாலை மறியல்

280பார்த்தது
புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டில் பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், குழாயை உடனடியாக சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி