புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே லாஸ்பேட்டை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் வாக்காளர் பட்டியலுடன் ரூ.20,000 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.