புதுவை: காதல் திருமணம் செய்த இளம்பெண் மரணம்

1பார்த்தது
புதுவை: காதல் திருமணம் செய்த இளம்பெண் மரணம்
கடலூா் மாவட்டத்ச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பன்னீா்செல்வம் மகள் ராஜேஸ்வரி (25), புதுச்சேரி காட்டுகுப்பத்தில் தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். அவா் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரை கடந்த ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டாா். திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பப் பிரச்னைகளால் இருவரும் தனியாக வசித்து வந்தனா். இந்நிலையில், ராஜேஸ்வரி தனது தாய் மனோரஞ்சிதத்திடம் குடும்பத்தில் தன்னை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறியதாகத் தெரிகிறது. சனிக்கிழமை மாலை ராஜேஸ்வரி போனை எடுக்காததால், அவரது கணவா் கணபதி வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, ராஜேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் கூறினா். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜேஸ்வரியின் தந்தை பன்னீா்செல்வம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.