புதுச்சேரி அருகே வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினாவிற்கு செல்லும் வழியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுச்சேரி போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி, அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.