பீகார் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய புதுச்சேரி பாஜக

1பார்த்தது
பீகாரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று எண்ணப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநில பாஜக சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். இந்திராகாந்தி சிலை சதுக்கத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி