புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகும் விளம்பர பேனர்களை அகற்றாத நெல்லித்தோப்பு தொகுதி சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், லெனின் வீதியில் சுயேச்சை வேட்பாளரின் சின்னம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விளம்பர தட்டி அகற்றப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.