புதுச்சேரி, ஒரு தேர்வு மையமாக யு.பி.எஸ்.சி.யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செய்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வை புதுச்சேரி மையத்தில் எழுத 2,239 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளி, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல் நிலைபள்ளி, பாத்திமா மேனிலை பள்ளி, காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு ஆராய்ச்சி மையம், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி ஆகிய ஏழு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.