புதுச்சேரி: வாக்குச்சாவடி மையத்தில் மோதல்.. போலீஸ் குவிப்பு

0பார்த்தது
புதுச்சேரியின் மண்ணாடிபட்டு தொகுதியில் உள்ள திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினர் அதிகளவில் திரண்டிருந்ததால் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது வாக்குவாதமாக மாறி மோதலாக வெடித்தது. பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கனூர் போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்புடைய செய்தி