புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கொரோனா பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்துவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளது. முக கவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன, மருத்துகளும் போதிய அளவில் உள்ளது. மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுலும் பின்பற்றப்படுகின்றன என்றார்.
தொடர்ந்து 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு என். ஆர். காங்கிரஸ் தயாராக உள்ளதா என நிருபர்கள் கேட்டதற்கு, தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங் நீடிக்குமா? அணி மாறுமா? என்ற கேள்விக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பதிலளிக்காமல் காரை இயக்க டிரைவருக்கு சைகை காட்டினார்.