புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தைக் கண்டித்து பாஜக இளைஞரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மோடி உருவ பொம்மையை எரித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் ஆனந்த்பாபு, அய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீதும், ஆடலரசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.