புதுச்சேரி; மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது

6பார்த்தது
புதுச்சேரி; மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது
புதுச்சேரி பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலாளர் முருகேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, அரசு ஊழியர்கள் அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு வாகனங்களின் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்வதுடன், எரிபொருள் செலவை குறைக்க வாகன பகிர்வு முறையை பின்பற்ற வேண்டும். பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தவும், மதிய உணவு நேரங்களில் தேவையின்றி வீட்டிற்கு செல்வதை தவிர்த்து, உணவை அலுவலகத்திற்கே கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி