புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 55.49% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மாலைக்குள் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.