புதுச்சேரில் காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும் VVPAT எந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பேட்டரியில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பேட்டரி மாற்றியதும் வாக்குப்பதிவு தொடங்கியது.