புதுச்சேரி: கால்வாயில் விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வாகனம் விபத்து

2பார்த்தது
புதுச்சேரி: கால்வாயில் விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வாகனம் விபத்து
புதுச்சேரி, முத்தியால் பேட்டை கால்வாயில் ஒருவர் விழுந்ததாக நேற்று (பிப்ரவரி 10) மாலை தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அவரை மீட்கச் சென்ற தீயணைப்பு வாகனம் எஸ்.வி.பட்டேல் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. அந்தக் கார் சாலையிலிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் ஒரு பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி